முடியாது… கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது
புதுடில்லி:
கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடந்த நீட் நுழைவுதேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மதிப்பெண் குறைந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி டி.கே.ரங்கராஜன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தமிழில் நுழைவு தேர்வு எழுதியவர்களுக்கு தலா, 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீட் தேர்வு எழுத பிளஸ் 2 மணவர்களுக்கு கண்டிப்பாக ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்தது.
இந்த மனு மீது விசாரணை நடக்கும் நிலையில், கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது. நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைமுறைகள் முடிந்துவிட்டன. இந்த ஆண்டு எந்த இடைக்கால நிவாரணமும் அளிக்க முடியாது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க விசாரணை நடத்த தயார் எனக்கூறி, வழக்கை செப்., 26 க்கு கோர்ட் ஒத்தி வைத்தது.
நன்றி– பத்மா மகன், திருச்சி