முதன் முதல் பெண் வங்கி தலைவர்

சௌதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துகொண்டிருக்கறார். சமீபத்தில் அந்நாட்டின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டார். பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.இந்த வரிசையில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. சவூதியில் செயல்பட்டு வரும் ’சவூதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்’ என்ற ஒருங்கிணைக்கப்பட்ட வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தற்போது தலைமை வகித்து வருகிறார் லுப்னா அல் ஒலயன்.

“சௌதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக லுப்னா அல் ஒலயன் விளங்குவார். கடந்த ஒரு வருடமாக சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள சமூகப் புரட்சியால் பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி உட்பட சில உரிமைகள் கிடைத்துள்ளன. இது ஒரு நல்ல மாற்றத்துக்கான அறிகுறி” என்று உலகெங்கிலுமிருந்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Sharing is caring!