முதலாவது பாதுகாப்பான சுற்றுலா நாடு ஓமன்

சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஓமன் முதலிடம் பெற்றுள்ளது.

உலக பொருளாதாரத்துறை சார்பில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் உலக அளவில் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த 2018-ம் ஆண்டுக்கான சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

உலக அளவில் ஓமன் நாடானது மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், மொத்தம் 140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இதுவரை ஓமனில் எந்தவித பயங்கரவாத செயல்களோ அல்லது அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என்பதை தெரிவிக்கிறது.

அது மட்டுமல்லாமல் அரபு நாடுகளில் சிறந்த போலீஸ் சேவைக்கான பட்டியலில் ஓமன் போலீஸ் 5-வது இடத்தை பிடித்துள்ளது எனவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஓமனில் தொடர்ந்து பாதுகாப்புத் துறையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!