முதல்வருக்கு பயம் ஏற்பட்டதால்தான் தடை… அமித்ஷா சொல்றார்

புதுடில்லி:
பயம்… முதல்வருக்கு பயம்… அதனால்தான் தடை என்று பாஜ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., அறிவித்த பேரணியை பார்த்து பயம் ஏற்பட்டதால் தான், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

2019 லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. கூச்பெகரில் இந்த யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., தலைவர் அமித்ஷா டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளால் மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தூக்கமும் தொலைந்துவிட்டது. இதனால் தான் அவர் யாத்திரையை தடுத்துள்ளார். ஆதரவு குறைந்து வருவதை கண்டு அவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு தீர்வு கிடையாது.

பா.ஜ.,வை ஆதரிப்பது என்பது மக்களின் முடிவு. இங்கு மாபியாக்கள் செயல்படுகின்றனர். அனைத்து விஷயங்களையும் சட்டப்படி அனுமதி பெற்று யாத்திரை நடக்கும். யாத்திரை ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் யாத்திரை செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!