முதல்வர் கூறிய கருத்து… கோர்ட்டில் வழக்கு

முசாபர்புர்:
வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கமல்நாத் கூறிய கருத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது.

‘பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களால், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது’ என, ம.பி., முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற, காங்கிரஸ் மூத்த தலைவர், கமல்நாத் கூறினார்.

‘இது, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளது’ என, கமல்நாத்துக்கு எதிராக, பீஹாரின் முசாபர்புர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!