முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை… மேகதாது விவகாரம் குறித்து ஆலோசனை

சென்னை:
இன்று ஆலோசனை… ஆலோசனை… மேகதாது விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.,களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று 5ம் தேதி மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், 7ம் தேதி அணை கட்டுவது தொடர்பாக நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்துவர் என கர்நாடகா தெரிவித்ததையடுத்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!