முதல்வர் பொது நிவாரண நிதி… அதிமுக ரூ. 1 கோடி வழங்கல்

சென்னை:
அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது… முதல்வர் பொது நிவாரண நிதிக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, அ.தி.மு.க., சார்பில், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.’கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கவும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், நிதியுதவி வழங்கும்படி, அனைத்து தரப்பினருக்கும், முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்று, ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். நேற்று, அ.தி.மு.க., சார்பில், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம், கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வழங்கினார்.

ஜெ., பேரவை சார்பில், 50 லட்சம் ரூபாய்; மதுரை மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில், 17.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், தன் ஐந்து மாத ஓய்வூதியத் தொகையான, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் வழங்கினார். இது தவிர பல்வேறு தொழில் அதிபர்களும், முதல்வரிடம் நிவாரண உதவி வழங்கி உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!