முதல் பலிகடா ஆனார்… அட்டர்னி ஜெனரல்… ராஜினாமா செய்தார்

வாஷிங்டன்:
ராஜினாமா… ராஜினாமா செய்தார் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் தன் பதவியை ராஜினாமா செய்தார். டிரம்பின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு அவர் விலகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலம் பெரும் நிலையில் உள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி, செனட் சபையை தக்க வைத்துக் கொண்டது. இருந்தாலும் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெறவில்லை.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசு நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இதற்கு முதல் பலிகடாவாகி உள்ளார் அந்நாட்டு அட்டர்னி ஜெரனல் எனப்படும் அரசு தலைமை வக்கீல் ஜெப் செஷன்ஸ். டிரம்பின் கோரிக்கையை ஏற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டெனால்டு டிரம்ப்பின் கோரிக்கை ஏற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விஷயங்களில் ஜெப் செஷன்ஸ் செயல்பாடுகளால் டிரம்ப்புடன் மோதல் ஏற்பட்டதாலே ராஜினாமா முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இவரது ராஜினாமா குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், ஜெப் செஷன்ஸ் சேவைக்கு நன்றி அவர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!