முத்தலாக் தடை மசோதாவில் மாற்றம் செய்யணும்… அதிமுக எம்பி., வலியுறுத்தல்

புதுடில்லி:
முத்தலாக் தடை மசோதாவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசினார்.

முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்பி அன்வர்ராஜா பேசியதாவது:

தற்போதைய வடிவில் இந்த மசோதா சட்டத்திற்கு எதிரானது. இதனைஏற்க முடியாது. மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். மசோதாவில், ஷரியத் சட்டத்திற்கு எதிராக சில பிரிவுகள் உள்ளது. முஸ்லிம் ஆண்களை மட்டும் குறிவைப்பது ஏன்?

விவாகரத்தானது முஸ்லிம் மதத்தில் மட்டும் நடக்கவில்லை. மற்ற மதங்களிலும் நடக்கிறது. 3 ஆண்டு சிறை தண்டனை அபராதம் என்பது முஸ்லிம் குடும்பம், வீடுகளை சீர்குலைத்துவிடும். முஸ்லிம் தனி நபர் சட்டப்படி திருமண ஒப்பந்தத்தை தலாக் சொல்லி ரத்து செய்ய கணவன் மனைவிக்கு உரிமை உள்ளது.

இந்த மசோதா, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த வடிவில் மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம. திருத்தம் செய்ய தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் தமிழில் பேசியதாவது: முஸ்லிம் மதத்தில் இறைசட்டம் 1400 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. இது மனிதர்களால் எழுதப்படவில்லை. சட்டங்கள் இறைவனால் எழுதப்பட்டவை. இறைவன் சொன்ன சட்டம் என்பதால் தான், மாற்றம் கொண்டு வராமல் உள்ளோம்.

ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக கிராமங்களில் ஆதரவை இழந்தீர்கள். ஜிஎஸ்டி காரணமாக நகரங்களில் ஆதரவை இழந்தீர்கள். சமீபத்தில் தோல்வியை தழுவினீர்கள். இறைவனால் உருவாக்கப்பட்டு 1400 ஆண்டுகளாக திருத்தம் இல்லாமல் இருக்கும் இந்த சட்டம் இறைவனுக்கு எதிராக கொண்டு வருகிறீர்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!