முத்தலாக் தடை மசோதா இன்றும் மீண்டும் தாக்கல்?

புதுடில்லி:
முத்தலாக் தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜ்யசபாவை முடக்கிய முத்தலாக் தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ‘முஸ்லிம்களில், முத்தலாக் எனப்படும் மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து பெறும் நடைமுறை செல்லாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவ்வாறு விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும் மசோதா அவசர சட்டமாக அமல் படுத்தப்பட்டது. இந்த அவசர சட்டத்தின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றால், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இந்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் வகையில், திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி லோக்சபாவில், நிறைவேறியது.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் விவாதம் நடக்காமல் நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

பார்லி.,க்கு நேற்று விடுமுறை என்பதால் இன்று (2ம் தேதி) மீண்டும், இந்த மசோதா மீதான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!