முத்தலாக் தடை மசோதா நாளை தாக்கல்… தாக்கல்!!!

புதுடில்லி:
நாளை திங்கட்கிழமை தாக்கல்… முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

முத்தலாக் தடை மசோதா ராஜ்யசபாவில் நாளை 31ம் தேதி தாக்கல் செய்யபடவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 27 ம் தேதி இந்த மசோதா மீது லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. தொடர்ந்து 245 எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த ஓட்டெடுப்பில் காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் இந்த மசோதா 31 ம்தேதி ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார். விவாதத்தின்போது காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் பிற எதிர்கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே நாளை ராஜ்யசபாவில் அனல்பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!