முத்திரைத் தாள் வழக்கு மேல் முறையீடு… தெல்கி விடுதலை

மும்பை:
முத்திரைத் தாள் வழக்கில் மேல் முறையீட்டில் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாசிக் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ரூ.பல்லாயிரம் கோடி அளவிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 202 கோடி அபராதமும் விதித்து நாசிக் கோர்ட் உத்தரவிட்டது.

புனே எர்ரவாடா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தெல்கி தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நிலையில் 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாசிக் கோர்ட் உத்தரவிட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!