முன்ஜாமீன் கேட்ட மாஜி மத்திய அமைச்சர்… எதிர்ப்பு தெரிவித்துள்ள அமலாக்கத்துறை

புதுடில்லி:
முன்ஜாமீன் கேட்டு மாஜி மத்திய அமைச்சர் செய்துள்ள மனுவிற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு, டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில் விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம். முன்ஜாமீன் வழங்கினால், விசாரணையை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (1ம் தேதி) விசாரணை நடக்க உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!