முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் (Alvaro Uribe), தனது செனட் சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் (Alvaro Uribe), தனது செனட் சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

அல்வரோ யுரைப் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டமை இதுவே முதல்தடவை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!