முன்னாள் முதல்வரின் மனைவி காங்கிரசில் இணைந்தார்

ராஞ்சி:
காங்கிரசில் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வரின் மனைவி.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மனைவி கீதா கோடா காங். கட்சியில் இணைந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மதுகோடா, காங், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட், முக்தி மோர்சா ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார்.

இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இவரது மதுகோடாவின் மனைவி கீதா கோடா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜெகந்நாத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். நேற்று டில்லி சென்று காங். தலைவர் ராகுலை சந்தித்து அவரது முன்னிலையில் காங். கட்சியில் இணைந்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!