முப்படைகளிலும் சேர வாங்க… பெண்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

சென்னை:
முன் வரவேண்டும்… பெண்கள் முன் வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

”முப்படைகளில் சேர்ந்து பணியாற்ற பெண்கள் முன்வர வேண்டும்,” என ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர்  பேசியதாவது:

பெண் கல்வி என்பது, புது சிந்தனையல்ல. வேதங்களை தொகுத்தவர்களில் 22 பேர் பெண்கள். நம் சமூகம், பெண்கள் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், எப்போதும் இடம் அளித்துள்ளது.

ராணுவத்தில், பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. தற்போது, பள்ளி சீருடை அணிந்துள்ள மாணவியர், வருங்காலத்தில், ராணுவம், கப்பல், விமான படைகளின் சீருடை அணிந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!