மும்பை தாக்குதல் குற்றவாளி மீது சக கைதிகள் கடும் தாக்கு

சிகாகோ:
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி மீது சிறையில் மற்ற கைதிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி (58) மீது சிறயைில் சக கைதிகள் தாக்கியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உட்பட பல இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார், அமெரிக்க கோர்ட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமெரிக்க கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மன்னிப்பு வழங்கினால், அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை கடந்த 8-ம் தேதி சக கைதிகள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!