மும்பை பயங்கரவாத தாக்குதல்… தகவல் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு… அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்:
மும்பை பயங்கரவாத தாக்குதல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

2008 ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் பற்றியோ அல்லது அதற்கு திட்டம் தீட்டிய அல்லது உதவியவர்கள் பற்றிய தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.35 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்று (நவ.,26) உடல் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க செயலாளர் மைக்கேல் ஆர்.போம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் 10 ம் ஆண்டு நினைவு நாளில் மும்பை நகர மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் அமெரிக்க அரசும், அனைத்து அமெரிக்கர்களும் தோளோடு தோள் நின்று அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த 6 அமெரிக்கர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாங்கள் துணை நிற்போம். இந்த மோசமான தாக்குதல் ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதற்கு காரணமான பயங்கரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாக்.,ஐ வலியுறுத்தி உள்ளோம். இந்த தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன போதும் இதற்கு திட்டமிட்டவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.

லஸ்கர் இ தொய்பா உள்ளிட்ட அனைத்து பயங்கர அமைப்புக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து நாடுகளையும், குறிப்பாக பாகிஸ்தானை கேட்டுக் கொள்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு திட்டம் தீட்டியவர்கள் அல்லது அதற்கு உதவியர்கள் குறித்து தகவல் தந்தால் அமெரிக்காவின் நீதிக்கான வெகுமதி துறை சார்பில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!