முயற்சி முறிந்தது…முதல்வரின் முயற்சி முறிந்தது… திமுகவுக்கு பறந்த செந்தில் பாலாஜி

சென்னை:
முடியலையே… எடப்பாடியாரின் முயற்சி முடியாமல் போய் விட்டதே என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?

அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர் தினகரன் மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் அதிருப்தியில் இருக்கும் தகவலை, ஒரு மாதத்துக்கு முன்பே, தமிழக உளவுத்துறை அதிகாரிகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து தன்னுடைய ஆதரவாளர்கள் சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களின் கட்சிக்காரர்கள் சிலரை அழைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘செந்தில் பாலாஜி அ.ம.மு.க.,லிருந்து விலகி தி.மு.க., பக்கம் செல்ல விடக்கூடாது. அவரிடம் பேசி, அ.தி.மு.க., பக்கம் கொண்டு வாருங்கள்’ என்று அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சேலம், ஆத்தூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் செந்தில் பாலாஜியிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, செந்தில் பாலாஜி ‘கரூர் மாவட்ட அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர், இன்றைக்கும் அரசியலில் என்னை ஒழிப்பதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர், அ.தி.மு.க.,வில் இருக்கும் வரை, நான் அங்கு வருவது சரியாக இருக்காது’ என்று அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டு அதிமுகவின் முயற்சியை முறியடித்து விட்டார்.

இதையடுத்துதான் திட்டமிட்டபடி செந்தில் பாலாஜி, தி.மு.க., பக்கம் போயிருக்கிறார். இந்த முயற்சி எடுபடாமல் போகவே தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘செந்தில் பாலாஜியை தாக்கி பேசுகிறாராம். இதை விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!