முலாயம் சிங் சகோதரருக்கு மாயாவதி வசித்த பங்களா ஒதுக்கீடு

லக்னோ:
மாயாவதி வசித்து வந்த பங்களாவில் முலாயம் சிங்கின் சகோதரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முன்னாள் முதல்வர்கள் வசித்து வந்த அரசு பங்களாக்களை காலி செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து பங்களாக்களும் காலி செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான, மாயாவதி வசித்து வந்த பங்களா, சமாஜ்வாதி நிறுவனர், முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் யாதவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பங்களாவில், ஷிவ்பால் யாதவ், நேற்று குடியேறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!