மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி ஊடாக கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘கருணாநிதிக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று குறைந்து வருவதால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார்’ என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!