மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தை!!
இரண்டு மாதக் குழந்தை ஒன்று அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாததால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியா – சட்டீஸ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ராய்ப்பூர் தொடருந்து நிலையத்தில் 2 மாத கைக்குழந்தையுடன் தம்பதிகள் வந்திறங்கிய போது குழந்தைக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனே குழந்தையின் தந்தை அம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
வைத்தியசாலைக்கு சென்ற அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாமல் போக, அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியாது போயுள்ளது.
பலத்த முயற்சிகளின் பின் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் ஒக்ஸிஜன் குறைபாடு காரணமாக குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S