மூடக்கூடாது… உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது

சென்னை:
மூடக்கூடாது உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஊட்டியில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!