மெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர்பலி

மெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிஉள்ளனர்.

மெக்சிகோவின் கரிபால்டி சுற்றுலா தலத்தில், நேற்று திரண்டிருந்த ஏராளமானோர், அங்கு வார விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தனர்.

அவ் வேளை அங்கு சென்ற இசைக்கலைஞர்கள் போல் வேடமிட்ட 5 பேர் கொண்ட குழு தாம் வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியபின் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற காவற்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து காவற்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Sharing is caring!