மெக்ஸிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் கைது

மெக்ஸிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மீது பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களிடமிருந்த உடல் உறுப்புக்கள் குறைந்தது 10 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், இவர்களின் கைதின் பின்னரான விசாரணையின்போது, மெக்ஸிகோவின் புறநகர்ப் பகுதியில் 20 பெண்களைக் கொலை செய்ததாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்தோடு, விசாரணையாளர்களினால் குறித்த தம்பதியினரின் குடியிருப்பிலிருந்து உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த உறுப்புகள் சீமெந்து நிரப்பப்பட்ட வாளிகளில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளன.

இந்தத் தம்பதியினர் உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளன சட்டத்தரணிகள், யாருக்கு விற்பனை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.

Sharing is caring!