மெழுகு சிலை வைக்கப்பட்ட முதல் யோகி : பாபா ராம்தேவ்

இங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள மதாம் துசாட் மெழுகுச் சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட்ட முதல் யோகி நான் தான் என பாபா ராம்தேவ் கூறி உள்ளார்லண்டனில் உள்ள மதாம் துசாட் அருங்காட்சியகத்தில் பல உலகப் புகழ் பெற்றவர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இங்குள்ள மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்படுவதால் சிலை போல தோற்றம் அளிக்காது. அந்த தலைவர் நிற்பது போலவே இருக்கும்.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் புகழ் பெற்றவர்கள் சிலைகளும் உள்ளன,

இந்தியாவின் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் சிலையை இங்கு அமைக்க இந்த அருங்காட்சி அகத்தினர் ஒப்புதல் கோரி உள்ளனர். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவே மெழுகுச் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இது குறித்து பாபா ராம்தேவ் தனது டிவிட்டரில், “மதாம் துசாட்ஸ் அருன்க்கட்சியகத்தில் முதல் முதலாக ஒரு யோகியின் சிலை அதாவது என்னுடைய சிலை நிறுவப்படுகிறது. இந்த நிகழ்வு யோகா விஞ்ஞானத்துக்கு கிடைத்த இன்னொரு புகழ் ஆகும். இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் யோகா வாழ்க்கை முறையை பின்பற்ற தூண்டப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!