மேகதாதுவில் அணை… தமாகா சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

மேகதாதுவில், கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் வாசன் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மத்திய அரசின் அனுமதி அதிர்ச்சியை அளிக்கிறது. ஒகேனக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கும். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். உணவு பற்றாக்குறை உருவாகும். காவிரியில் தமிழகம், தனது உரிமையை படிப்படியாக இழந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!