மேகதாது அணை விவகாரம்… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது
புதுடில்லி:
அவதூறு வழக்கு… அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு. எதற்காக தெரியுங்களா?
மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான ஆய்வு அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வருவது நின்று விடும். டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை ஏற்று, சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டி, ‘மேகதாதுவில் அணை கட்ட, அனுமதி அளிக்கக் கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன், கர்நாடகா நீராவரி நிகாம் லிமிடெட் அமைப்பு மீது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி