மேகதாது அணை விவகாரம் பாஜவை மிரட்ட முதல்வர் தயாராகிறார்

சென்னை:
மேகதாது அணை விவகாரத்தில் பாஜவை மிரட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தபின் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி பிரச்னையில் நாடாளுமன்றம் முடங்கியதால்தான் நாடே நம்மை திரும்பி பார்த்தது. அது போல வரும் நாட்களில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜ வை மிரட்ட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். காரணம் சமீப காலமாக மத்திய அரசு தங்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதில்லை என்கிற கோபத்தில்  இருக்கும் எடப்பாடி இதனை பயன்படுத்திக் கொள்வார் என்றும் கூறுகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!