மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

சேலம்:
மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 62,000 கனஅடியில் இருந்து 67,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் 19வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 48,065 கனஅடியில் இருந்து 61,291 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.31 அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர்இருப்பு 93.96 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து 66,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!