மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

சேலம்:
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது… மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கனஅடியில் இருந்து 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 25,800 கனஅடியில் இருந்து 27,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.04 அடியாகவும், நீர்இருப்பு 93.53 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் அதிக நீர்வரத்து காரணமாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!