மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு குறைகிறது

சேலம்:
குறைந்து கொண்டே வருது… மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.07 அடியாகவும், நீர்இருப்பு 70.21 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 27,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக குறைந்துள்ளது. பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!