மைக்ரா பிராசசர்… சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

சென்னை:
சாதனை… சாதனை… சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் முதல்முறையாக மைக்ரோபிராசசர்களை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ‘சக்தி’ என பெயரிடப்பட்ட இந்த மைக்ரோ பிராசசர்கள், இஸ்ரோவின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசிப்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மைக்ரோ பிராசசர்கள் தேவைக்கு வெளிநாட்டை சார்ந்திருப்பது குறைவதுடன், தொலை தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறையில் சைபர் தாக்குதல்களை குறைக்க முடியும்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் காமகோடி வீழிநாதன் கூறுகையில், மைக்ரோ பிராசசர், எந்த சாதனத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு சாதனங்களுக்கு வெவ்வேறு வகையான பிராசசர்கள் தேவைப்படும். தற்போது, நாங்கள் வடிவமைத்த புதிய பிராசசரின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!