மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது

பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது.

மைக்ரோனேசியாவில் இருந்து பப்புவா நியூகினியாவிற்கு விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் நியுகினி 737-800 என்ற விமானம், அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று காலை ஒன்பதரை மணிக்கு இடை நிறுத்தமான வினோ தீவில் தரையிறங்க முயன்றது.

ஆனால் ரன்வேயைத் தாண்டி சென்ற விமானம், கடலில் இறங்கியது. அப்போது உள்ளே இருந்த 35 பயணிகள் உள்ளிட்ட 47 பேர் விமானத்தில் இருந்து வெளியேறி உதவி கோரினர்.

பின்னர் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்ட தீவு வாசிகள், படகுகளுடன் சென்று பயணிகளை அவர்களை மீட்டனர்

Sharing is caring!