மோமோ சேலஞ்ச்… மேற்கு வங்கத்தில் 2 பேர் தற்கொலை

கோல்கட்டா:
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்த கதை போல் ப்ளுவேல் சேலஞ்ச் கேம் போய் இப்போது மோமோ சேலஞ்ச் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில், ‘மோமோ சேலஞ்ச்’ விளையாடி, இரண்டு பேர் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், குர்ஷியாங் என்ற இடத்தில், மணீஷ் ஷர்கி, 18, அதிதி கோயல், 26, ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும், மோமோ சேலஞ்ச் விளையாடி, அதில் வந்த கட்டளைப்படி தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, மேற்கு வங்க அரசு உஷார் அடைந்துள்ளது. பள்ளி, கல்லுாரி, மாணவ – மாணவியர் நடவடிக்கையை கண்காணிக்க, கல்வி நிறுவனங்கள் மற்றும் போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!