ம.பி. சட்டசபை தேர்தல்… ஓட்டுப்பதிவு மையங்களில் பெண்களுக்கு மட்டுமே பணி

போபால்:
இன்று நடக்க உள்ள ம.பி. சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு மையங்களில் அனைத்து பணிகளிலும் பெண்கள் மட்டுமே ஈடுபட உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இன்று நடைபெற உள்ள ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் 2 ஆயிரம் ஓட்டுப்பதிவு மையங்களில் அனைத்து பணிகளிலும் முழுமையாக பெண்கள் மட்டுமே ஈடுபட உள்ளனர்.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் கந்தாராவ் கூறி இருப்பதாவது:

ம.பி., மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிச.,11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு பதிவு துவங்குவதற்கு குறுகிய காலமே இருப்பதால் பிரசாரம் செய்வதற்கும், சமூக ஊடகங்களில் எந்த விதமான விளம்பரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்வை குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 2 ஆயிரம் ஓட்டுப்பதிவு மையங்களில் அனைத்து பணிகளிலும் முழுமையாக பெண்கள் மட்டுமே ஈடுபட உள்ளனர்.

160 ஓட்டுப்பதிவு மையங்களில் முழுமையாக மாற்றுதிறனாளிகளால் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. 12 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர்களாக பணியாற்ற உள்ளனர். பார்வைகுறைபாடு உள்ளவர்களுக்காக பிரெய்லி முறையில் போட்டோ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!