யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்… தலைமை நீதிபதி கருத்து

சென்னை:
யாராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். என்ன விஷயம்ன்னா…

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே 22 ல் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடந்தது. இது குறித்த விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தபோது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்ததாவது:

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். விசாரணை முறையாக நடக்க சி.பி.ஐ., தேவை. இதனால் மாநில போலீசில் நம்பிக்கையில்லை என அர்த்தமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!