யாருமே இல்லை… மோடிக்கு போட்டியாக… மத்திய அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி:
யாரும் இல்லை… பிரதமர் மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர்.

2019 லோக்சபா தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பா.ஜ., இளைஞர் அணியினர் மத்தியில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் மத்தியில் பா.ஜ., அமைப்பதை இளைஞர் அணியினர் உறுதி செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில், வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்லும் பிரதமர் மோடியை எதிர்த்தோ அல்லது அவருடன் ஒப்பிடும் வகையில் வேறு யாரும் இல்லை.

தேசத்தை முதன்மையாக வைத்து செயல்படும் ஆக்கப்பூர்வமான பிரதமர் கிடைத்தது நமக்கு பெருமை. எதிர்க்கட்சிகள் முதலில் தங்களது தலைமை குறித்து முடிவு செய்து கொண்டு பின்னர் மோடியை எதிர்த்து போட்டியிடட்டும்.

மோடி அரசின் சாதனைகளை அனைத்து மட்டங்களிலும் தொண்டர்கள் விளக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களால் பலன்பெற்றவர்கள் அனைவரையும் பா.ஜ.,வினர் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!