யார்? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது யார்?

சென்னை:
யார்? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது யார் என்று கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆர்..கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. விசாரணை நடத்தியதில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதியாதது ஏன்?

வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்ன. இவ்வாறு நீதிபதிள் கேள்வியெழுப்பினர்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!