யார் பெஸ்ட்? LOVERS Vs SINGLES?

காதலர் தினம்…காதலை கொண்டாடுவதற்கு ஒரு நாள்…

காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பார்க், பீச், தியேட்டர் என சுற்றுவது, அன்றைய தினம் காதலி என்னவெல்லாம் கேட்கிறாளோ, அதை கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் காதலன் வாங்கிக்கொடுப்பது(பெரிய மலையையே கேட்டாலும் தகர்த்து கொண்டுவர தான் வேண்டும்..) பதிலுக்கு ககாதலனுக்கு காதலி வாங்கிக் கொடுப்பது, இதையும் தாண்டி பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் ஜோடிகள் செல்ல சிரிப்புடன் கொஞ்சுவது.. இதையெல்லாம் நாம் கண்கூடாகவே பார்க்கலாம்…

முந்தைய நாள் சண்டையிட்டிருந்தாலும், காதலர் தினத்தன்று காதலர்கள் றெக்கை முளைத்து வானில் பறப்பதை போன்று தான் இருப்பார்கள். காதலர்களின் அட்டகாசத்தை கண்டு கண்டு சிங்கிள்ஸ் பொறாமைப்பட்டு தான் போவார்கள். அந்த அளவுக்கு காதலர்கள் கொண்டாட்டம் இருக்கும் இந்நாளில். ஆனால், சோகமே உருவானது போல் சிங்கிள்ஸ் திரிவார்கள்…

சரி..  இவர்களில் யார் பெஸ்ட்… லவ்வர்ஸ் OR சிங்கிள்ஸ்..? சின்னதா ஒரு கம்பேரிசன்…

►  காதலி எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ, அவளை பிக் அப், ட்ராப் செய்வது தான் காதலனின் முதல் வேலை/சேவை (சிலர் விரும்பி பண்ணுவதும் உண்டு) …காதலியிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டாலே அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு காதலன் சென்று விட வேண்டும்.. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு… காதலி எவ்வளவு நேரம் கடையில் பர்சேஸ் செய்கிறாரோ அதுவரை உடன் இருக்க வேண்டும்.

►  ஆனால் சிங்கிளா இருந்தா தினமும் தங்களது அன்றாட வேலைகளை சரியாக செய்ய முடியும். வழக்கமாக வார இறுதி நாட்களில் ஆண்கள் கிரிக்கெட், புட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மெய்மறந்து விளையாடுவதுண்டு. சிங்கிளாக இருப்பவர்கள் தான் தொடர்ந்து சரியாக விளையாடுவதற்கு வருவதாக ஒரு சேதி…

Sharing is caring!