யார் முதல்வர்… காங்கிரசில் இன்று நடக்க உள்ளது தேர்வு சுயம்வரம்

ராய்ப்பூர்:
யார் முதல்வர்… காங்கிரசில் இன்று நடக்கிறது சுயம்வரம்… சுயம்வரம்.

சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்பதற்கான, ‘சுயம்வரம்’ இன்று  நடக்க உள்ளது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் போட்டியிட்டது. இது குறித்து, விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவருமான, காங்கிரஸ் மூத்த தலைவர், டி.எஸ். சிங்தியோ, ‘சுயம்வரம் நடத்தி, முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது சட்டசபை தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, கட்சி புதிய, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பதவிக்கு, டி.எஸ். சிங்தியோவின் பெயர் முன்னிலையில் இருந்தாலும், மேலும் சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.பி,யான தம்ராத்வாஜ் சாஹூ, கட்சியின் மாநிலத் தலைவர் புபேஷ் பெஹல், முன்னாள் மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!