யூகங்கள் எப்போதும் வெற்றி பெறாது… ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

சென்னை:
ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அதிமுக அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது என்று பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர் அனைவரும் அடுத்த வினாடியே சிறைக்கு செல்வார் என கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. ஆனால் நாங்கள் சிறை செல்லும் வரை மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்களும் வெளியில் இருப்பார்களா? என்று பாருங்கள்.

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வழக்குகளை மறைப்பதற்காக அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் ஸ்டாலின்.

எனவே ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அதிமுக அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!