ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை

அரபுநாடான கத்தாரில் ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனம் பதஞ்சலி ஆகும். பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவரான பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புக்கு எக்கசக்கமான விளம்பரங்கள் தரப்படுகின்றன. உணவுப் பொருட்கள், சோப், ஷாம்பு, அழகு கிரீம்கள் என அனைத்தும் பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

நமது நாட்டில் ராணுவத்தினருக்கான சிறப்பு விற்பனை நிலையங்களிலும் பதஞ்சலி தயாரிப்புக்கள் விற்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நெல்லிக்காய் சாறு உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் தடை செய்யப்பட்டன. அதன் பிறகு. அதில் ஒரு சில பொருட்களுக்கு மட்டும் தடை நீக்கபட்டது. அதற்கான காரணம் சரிவர சொல்லப்படவில்லை.

முழுக்க முழுக்க ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டவை என பதஞ்சலி தயாரிப்பின் விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால் அரபு நாடான கத்தாரில் பதஞ்சலி பொருட்கள் ரசாயனக் கலப்பு அதிக உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி அந்த நாட்டில் பதஞ்சலி பொருட்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

இந்த தகவலை ஒரு நெட்டிசன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், “இந்த செய்தியை எந்த ஒரு இந்திய ஊடகமும் வெளியிடவிலை. அதற்கு முக்கிய காரணம் பதஞ்சலியின் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவருவதுதான். விளம்பர வருமானத்தை மனதில் கொண்டு ஊடகங்கள் மவுனமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!