ரசாயன தாக்குதல்…ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை

ரஷ்யாவின் ரசாயன தாக்குதல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. சில நாட்களில் இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்த ஆதாரம் கிடைத்த பிறகு ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர் கெதர் நவ்ரத் கூறும்போது, ”சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக ரசாயன அல்லது உயிரியல் ரீதியான ஆயுதங்களை தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக அந்த நாடு பயன்படுத்தியுள்ளது. இது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த ரஷ்ய உளவுப்படையை சேர்ந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்களால் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டத்து. ரஷ்ய உளவாளியான செர்கே இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

இதற்கு இடையில் ரசாயன தாக்குதல் நடந்தப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். இங்கிலாந்தின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது.

இது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், தாக்குதல் நடத்தியது ரஷ்யா என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறியது. இதை தொடர்ந்து மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை ரஷ்யா மீது விதித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.

Sharing is caring!