ரஜினி பிறந்த நாள்… குழந்தைகள் பாதுகாப்பு மொபைல் செயலி வெளியீடு

சென்னை:
ரஜினி பிறந்த நாளை ஒட்டி குழந்தைகள் பாதுகாப்பு மொபைல் செயலி வெளியிடப்படுகிறது.

நடிகர் ரஜினியின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது மனைவி லதா, குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின், மொபைல் போன் செயலியை வெளியிடுகிறார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்நாளை, மேலும் சிறப்பாக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலியையும் வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி நடித்த பேட்ட படத்தின் முன்னோட்டமும் இன்று வெளியிடப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!