ரத்து… ரத்து… 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவு எண்கள் ரத்து

புதுடில்லி:
ரத்து… ரத்து… 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை டில்லியில் என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலத்தில் இயக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான பெஞச் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி அரசு சார்பில் வக்கீல் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மேலும், நவ. 30 முதல் டிச.30 வரை டில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் சாதனம் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!