ரத்து… விராச்சிலை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து… கோர்ட் தீர்ப்பு

புதுக்கோட்டை:
முறைகேடு நடந்துள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விராச்சிலை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையில் 28-3-18 அன்று அறிவிக்கப்பட்டிருந்த விராச்சிலை கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக, இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி ராமதீர்த்தம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதில் திருச்சி மத்திய மண்டல குழு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து, நீதிபதி ராஜசூர்யா, விசாரணை செய்து, விதிமுறைகள் மீறி தேர்தல் நடத்தப்பட்டதாக 24ம் தேதி விராச்சிலை கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டு, மீண்டும் 2 – மாதத்திற்குள் தேர்தலை மீண்டும் முறையாக நடத்த உத்தரவிட்டார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!