ரபேல் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடில்லி:
அடுத்த ஆண்டு ஒப்படைக்கப்படும்… ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன விஷயம்?

2019-ம் ஆண்டு ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான டாசல்ட் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இதில், இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து, விமானத்தை தயாரிப்பதாக, பிரான்ஸ் நாட்டின், ‘டசால்ட்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் டாசல்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் ட்ரோப்பியர் கூறுகையில், திட்டமிட்டபடி 36 ரபேல் போர்விமானங்கள் 2019-ம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

ரபேல் விமானம் ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங். தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்த ராணுவ அமைச்சர் நி்ர்மலா சீத்தாராமன் டாசல்ட் நிறுவனத்திற்கு நேரில் சென்று விமானங்கள் தயாராகும் பணிகளை பார்வையிட்டார்.

இந்நி்லையில் டாசல்ட் நிறுவனம் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!