ரயிலில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

புதுடில்லி:
ரயிலில் டில்லிக்கு கொண்டு வரப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பக்கத்து நாடான பூட்டானைச் சேர்ந்த இரண்டு பேர், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, ரயில் மூலம், சமீபத்தில், டில்லிக்கு வந்தனர். அவர்களிடம், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து 3.13 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் மற்றொரு சம்பவத்தில் பூட்டானைச் சேர்ந்த மூன்று பேரிடம் 10.2 கிலோ தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!