ரயில் ஓட்டுனர்கள் கவனத்திற்கு… ரயில்வே நிர்வாகம் அட்வைஸ்

புதுடில்லி:
ரயில் ஓட்டுனர்களுக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் அட்வைஸ் செய்துள்ளது. என்னவென்று தெரியுங்களா?

‘ரயில் பாதை அருகில், மக்கள் கூட்டத்தை பார்த்தால், உடனடியாக ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்’ என, ரயில் ஓட்டுனர்களுக்கு, வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், தசரா அன்று நடந்த ரயில் விபத்தில், 59 பேர் பலியாகினர். இந்நிலையில், வடக்கு ரயில்வே நிர்வாகம், ஊழியர்களுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயிலை வேகமாக இயக்கும் போது, ரயில் பாதையை ஒட்டிய இடங்களில் திருவிழாக்கள் நடந்தாலோ அல்லது மக்கள் திரளாக கூடி நிற்பது தெரிந்தாலோ, ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும். அடுத்து வரும் ரயில்வே ஸ்டேஷனில், இது பற்றி, நிலைய அதிகாரியிடம், எழுத்து மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!